Paristamil Navigation Paristamil advert login

52 மாவட்டங்களிற்கு மழைமின்னல் புயல் எச்சரிக்கை!

52 மாவட்டங்களிற்கு மழைமின்னல் புயல் எச்சரிக்கை!

31 வைகாசி 2025 சனி 12:17 | பார்வைகள் : 1020


பிரான்ஸ் முழுவதும் வானிலை இன்று கணிசமாக மாற்றமiகின்றது. வெள்ளிக்கிழமை சூரிய ஒளியுடன் இருந்த வானம், இன்று மழைமின்னல்களால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிரான்சின் 52 மாவட்டங்கங்கள், மழைமின்னல்களின் தாக்கத்திற்கு உள்ளாகும். குறிப்பாக, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு மேற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது.

எச்சரிக்கைக்கு உள்ளாகும் மாவட்டங்களாக

Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Ardèche, Ardennes, Ariège, Aube, Aveyron, Cantal, Charente, Charente-Maritime, Cher, Côte-d'Or, Doubs, Isère, Jura, Loire, Haute-Loire, Loiret, Lozère, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Paris, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Somme, Vienne, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise அமைகின்றன.

வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன் பின், வேகமாக உருவாகும் பெரு மழை மண்டலங்கள் இந்த மாற்றத்தை உருவாக்கி உள்ளன. இவை, தரையில் உள்ள சூடான காற்றும், மேலாக உள்ள குளிர்ந்த காற்றும் சந்திக்கும் போது ஏற்படும் வானிலை மாற்றங்களின் விளைவாக தோன்றுகின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்