மருத்துவ உலகில் பிரெஞ்சு தேசம் - சாதனைகளின் பட்டியல்

20 பங்குனி 2016 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 24736
இந்தப் பிரெஞ்சுதேசம் மருத்துவத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களும் புதுமைகளும் அளப்பரியவை. அவற்றில் இருந்து சில..,
01. ஒரு உடலில் இருந்து எடுக்கப்பட்ட குருதியை இன்னொரு உடலில் செலுத்தும் குருதி மாற்று முறை பிரான்சிலேதான் கண்டுபிடிக்கப்பட்டது. 15.06.1667 இல் Jean-Baptiste Denys என்பவர் கண்டறிந்தார்.
02. மருத்துவர்கள் நோயாளிகளின் இதயத்துடிப்பை அறியப் பயன்படுத்தும் 'ஸ்டெதஸ்கோப்' கருவியும் இங்குதான் உருவாக்கப்பட்டது.
03. 'அஸ்பிரின்' மாத்திரையின் தாயகமும் பிரான்ஸ்தான். 1853 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
04. எலும்புகளில் உள்ள எலும்பு மச்சையை மாற்றும் முதலாவது சத்திர சிகிச்சையும் பிரான்சிலேதான் உருவாக்கப்பட்டது.
05. 'இன்சுலின் செலுத்தி' யின் பிறப்புடமும் பிரான்ஸ்தான். 1981 இல் கண்டறியப்பட்டது.
06. உலகில் அனைவருக்கும் தெரிந்த HIV வைரசும் பிரான்சிலேதான் கண்டுபிடிக்கப்பட்டது. ( 1983 இல் )
07. முகம் மாற்று அறுவைச் சிகிச்சையும் பிரான்சிலேதான் கண்டுபிடிக்கப்பட்டது. 2005 நவம்பர் 27 இல் முதலாவது முகம் மாற்றும் அறுவைச் சிகிச்சை நடந்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1