இஸ்லாமிய கலாச்சார உடை இல்லாத பாடசாலை முதல்நாள் - அசம்பாவிதங்கள்எதுவும் பதிவாகவில்லை .
4 புரட்டாசி 2023 திங்கள் 17:19 | பார்வைகள் : 6608
பாடசாலைகளில், கல்லூரிகளில் இஸ்லாமிய கலாசார உடை (அபாயா) அணிந்துசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை இந்தகட்டுப்பாடுகளுடன் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமானது.
இன்றைய முதல் நாளின் போது பல மாணவிகள் அபாயா அணிந்து வருகைதந்துள்ளனர். சிலர் அபாயா அணியாமல் வருகை தந்துள்ளனர். அபாயாவுடன்வருகை தந்த சில மாணவிகளுக்கு சில பாடசாலைகளில் அனுமதி மறுப்பட்டது. இருந்தபோதும் எவ்வித குழப்பங்களும் நிகழவில்லை. சிலர் அதனைஏற்றுக்கொண்டனர். சிலர் அபாயாக்களுடன் அனுமதிக்கப்பட்டனர் என பிரதமர்Elisabeth Borne தெரிவித்தார்.
“இன்று காலை அனைத்தும் சுமூகமாகச் சென்றது! நாங்கள் தொடர்ந்தும்பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். சூழ்நிலைகளை புரிய வைப்போம்” எனவும்பிரதமர் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு பிரான்சில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி, மதசார்பானஉடைகள் அல்லது செயற்பாடுகள் சமூக அமைதியைக் குலைக்குமாக இருந்தால், பாராளுமன்றத்தில் வாக்கெடுக்காமல் அரசு அதற்கு தடை விதிக்க முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.