Paristamil Navigation Paristamil advert login

2023 ஆம் ஆண்டு - நான்காவது அதிக வெப்பமான கோடைகாலம்

2023 ஆம் ஆண்டு - நான்காவது அதிக வெப்பமான கோடைகாலம்

4 புரட்டாசி 2023 திங்கள் 18:05 | பார்வைகள் : 6352


அதிக வெப்பம் கொண்ட கோடைகாலமாக இந்த 2023 ஆம் ஆண்டுபதிவாகியிருந்தது. இது பிரான்சில் பதிவாகும் அதிகவெப்பம் கொண்ட நான்காவதுகோடைகாலமாகும். 

 

முன்னதாக 2003, 2018, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அதிக வெப்பம்கொண்ட கோடைகாலம் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இவ்வாண்டின் (2023) கோடைகாலமும் அதிகூடிய வெப்பம் நிலவிய ஆண்டாக பதிவாகியுள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான கோடைகாலங்களுடன்ஒப்பிடுகையில் 1.4°C  வெப்பம் அதிகமாகவும், சராசரியாக 21.8°C வெப்பமும், அதிக வெப்ப நாட்கள் கொண்ட கோடைகாலமாகவும் இவ்வாண்டுஅமைந்திருந்தது.

 

1900 ஆம் ஆண்டின் பின்னர் அதிக வெப்பம் நிலவிய ஆண்டாக இந்த நான்குஆண்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

 

இவ்வாண்டின் ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 31 ஆம் திகதிவரையானகோடைகாலத்தில் பல நாட்கள் 40°C இற்கும் அதிகமான வெப்பம்நிலவியிருந்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்