இலஙகையில் நிலவும் சீரற்ற வானிலை - 6000ற்கும் அதிகமானோர் பாதிப்பு

5 புரட்டாசி 2023 செவ்வாய் 06:56 | பார்வைகள் : 7636
இலஙகையில் நிலவும் சீரற்ற வானிலையால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, காலி, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழை மற்றும் காற்றினால் நாடளாவிய ரீதியில், 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.