நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கியதை அடுத்து, சுமார் 700 பேர் வெளியேற்றப்பட்டனர்!!

2 ஆடி 2025 புதன் 21:59 | பார்வைகள் : 1049
பலேசோவில் (Palaiseau) உள்ள La Vague நீச்சல் மையத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 6 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார். மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உதவியுடன், சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு பரிசில் உள்ள Trousseau மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி தற்போது உயிர் ஆபத்தின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயாரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மருத்துவ உதவியைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு காரணமாக சுமார் 700 பேர்கள் நீச்சல் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெயிலால் கடும் கூட்டம் இருந்ததால், La Vague நீச்சல் மையம் அன்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
மே மாதத்திலும் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தது. எதிர்கால வெயில் நாட்களில் இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.