உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர்

3 ஆடி 2025 வியாழன் 18:09 | பார்வைகள் : 292
காசா தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் அவரது உரைக்கு கைதட்டி பாராட்டை வெளியிட்டுள்ளனர்.