பரிஸில் இசை விழாவில் தாக்கப்பட்ட பெண்- குற்றவாளிகள் கைது! (தாக்குதல் காணொளி)

3 ஆடி 2025 வியாழன் 19:11 | பார்வைகள் : 691
2025 ஜூன் 21 அன்று பரிசில் நடைபெற்ற இசை விழா (Fête de la musique) நடுவே, ஒரு பெண் மீது மோசமான வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் பரவியது. இந்த சம்பவம் பெரும் வன்மையை தூண்டியதால், நான்கு சந்தேக நபர்கன் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டு, மீதமுள்ள மூன்று பேர் இன்று பரிஸ் குற்றவியல் நீதி நீதிமன்றத்தில் விசாரணைகளிற்காக அழைத்துவரப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
காணொளியில், ஒரு நீல ஜெர்சி அணிந்தவர், தரையில் விழுந்திருந்த நபரை தாக்குகிறார்.
ஒரு பெண் தலையிட்டு தடுக்க முயன்றபோது,
PSG ஜெர்சி அணிந்த நபர் மற்றும்
ஒரு வண்ண ஜெர்சி அணிந்த நபர்
அவளைக் கீழே தள்ளி தாக்குகிறார்கள்.
அந்த பெண் மீது, நீல ஜெர்சி அணிந்தவர் முகத்தில் காலால் உதைக்கிறார்.
பின்னர், PSG ஜெர்சி அணிந்தவர், அந்த பெண்ணின் பையை பறித்து, அதை மூன்றாவது நபர் (சாம்பல் ஜெர்சி அணிந்தவர்) பெற்றுக் கொள்கிறார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்
1. Antoine N. (நீல ஜெர்சி)
வன்முறை மற்றும் கடுமையான தாக்குதல்
மொபைல் டெக்னாலஜி குறித்த குற்றச்சாட்டு (cryptologie) – பாதுகாப்பு குறியீட்டைப் பொலிஸாரிடம் வழங்க மறுத்தார்
தண்டனை: 3 வருடங்கள் சிறை + 270,000 யூரோ வரை அபராதம்
2. Erwan W. (PSG ஜெர்சி, பிறந்த ஆண்டு: 2003)
பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டு
தண்டனை: 3 வருடங்கள் சிறை + 45,000 யூரோ அபராதம்
3. Alexandre C. (வண்ண ஜெர்சி, பிறந்த ஆண்டு: 1999)
மூன்றாவது பாதிக்கப்பட்ட நபரிடம் வன்முறை
தண்டனை: 3 வருடங்கள் சிறை + 45,000 யூரோ அபராதம்
எப்படி அடையாளம் காணப்பட்டனர்?
சம்பவ இடத்தில் ஒரு கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
இருவர் திரும்பி வந்து, 'கைப்பேசியைத் தொலைத்தோம்' என முறைப்ட்டுள்ளனர்.
அப்போது காவற்துறையியனர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர், ஆனால் முறையான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் வெளியே சென்றனர்.
பின்னர், தொலைபேசி தரவுகள் மூலம் Antoine N. மற்றும் Erwan W. அடையாளம் காணப்பட்டனர்.
தீர்ப்பு எதிர்பார்ப்பு
இந்த அருவருப்பான காணொளியால் சமூக ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன.
மூன்று சந்தேக நபர்களும் தற்போது நீதித்துறையின் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர்.
இது பொதுமக்கள் கூடும் இடத்தில் பெண்கள் மற்றும் பாதுகாப்பற்றவர்கள் மீதான வன்முறைகள் குறித்து ஒரு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழக்கு என்ற வகையில் பார்வையிடப்படுகிறது.