பரிஸ் : தொடருந்து நிலைய கூரையில் இருந்து குதித்த மூவர் கைது!!

4 ஆடி 2025 வெள்ளி 10:43 | பார்வைகள் : 591
தொடருந்து நிலைய கூரையில் இருந்து நடைமேடையில் குதித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Passy மெற்றோ நிலையத்தில் இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மூன்று இளைஞர்கள் மெற்றோ நிலையத்தின் கூரையில் இருந்து அடுத்தடுத்து குதிப்பது கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
முதல் இரு இளைஞர்களும் குதித்து தப்பி ஓடிய நிலையில், மூன்றாவது நபர் குதித்து காயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிடத்தின் கூரையில் ஏறியது ஏன் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
தப்பி ஓடிய இருவரும், காயமடைந்த மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.