மத அடிப்படையிலான வன்முறைகள் அதிகரிப்பு!!
.jpeg)
4 ஆடி 2025 வெள்ளி 15:04 | பார்வைகள் : 1611
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பிரான்சில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்கள் 75 சதவீதமாக அதிகரித்துள்ளன.
தற்போது 145 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதில் பெரும்பாலானவை (99) தனிநபர்களுக்கே எதிராக நடந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 209 சதவீதம் அதிகமாகும். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர் மீதான தீவிர எதிர்ப்பு நிலையை காட்டுகிறது.
அதேபோல், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் தொடருகின்றன. யூத விரோத செயல்கள் கடந்த ஆண்டைவிட 24 சதவீதமாக குறைந்தாலும், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 134 சதவீதம் அதிகமாக உள்ளது.
கிறித்தவர்களுக்கு எதிரான செயல்கள் 13 சதவீதமாக அதிகரித்து 322 ஆக உள்ளன, இதில் பெரும்பாலும் சொத்துக்களே இலக்காக உள்ளன. ஆனால் தனிநபர்களுக்கு எதிரான தாக்குதலும் 96 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1