Paristamil Navigation Paristamil advert login

Peugeot, Citroën, Fiat…636,000 கார்கள் மீளப்பெறப்படுகிறது??

Peugeot, Citroën, Fiat…636,000 கார்கள் மீளப்பெறப்படுகிறது??

4 ஆடி 2025 வெள்ளி 17:10 | பார்வைகள் : 2052


ஸ்டெலாண்டிஸ் (Stellantis )குழுமம் பூஜோ (Peugeot), சிட்ரோயன் (Citroën), பியாட் (Fiat), ஒபெல் (Opel) மற்றும் DS வாகனங்களில் பயன்படுத்தப்படும் 1.5 புளூஎச்டிஐ டீசல் என்ஜினில் (moteur diesel 1.5 BlueHDi) ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக 636,000 வாகனங்களை மீளப்பெறப்படுகிறது. 

2017 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்களில், கேம்ஷாஃப்ட் சைன் (la chaîne d’arbre à cames) எனும் முக்கிய பாகத்தில் உடைதல் ஏற்படுவதால், வால்வுகள் மற்றும் என்ஜினும் பாதிக்கப்படுகின்றன.

DV5 எனப்படும் சிறிய என்ஜின், பின்வரும் பிரபலமான மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது:

  • Citroën C3, C4
  • Opel Corsa, Mokka
  • Peugeot 208, 2008, 308

இந்த சிக்கலைச் சமாளிக்க, ஸ்டெலாண்டிஸ் குழுமம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, சேவையகங்களில் சோதனை செய்து, தேவைப்பட்டால் பாகங்களை மாற்றவுள்ளது. மேலும், என்ஜின் உத்தரவாதம் 10 ஆண்டுகள் அல்லது 240,000 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்த பாகத்தில் கோளாறு ஏற்பட்டவர்கள், சரியான பராமரிப்பு செய்யப்பட்டிருந்தால், செலவுகளுக்காக பணம் திரும்பக் கேட்கலாம் என குழுமம் கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்