அனைத்து கடைகளிலும் விற்கப்பட்ட இந்தக் கோழியை சாப்பிடக்கூடாது!!

4 ஆடி 2025 வெள்ளி 22:08 | பார்வைகள் : 2016
பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட Volaé என்ற நிறுவனத்தின் 450 கிராம் கோழி ரோட்டி தயாரிப்புகள் உண்பதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Intermarché நிறுவனம் வெளியிட்ட இந்த திரும்பப்பெறுதல் அறிவிப்பு, ஜூன் 14 முதல் 27 வரை விற்பனையான தொகுப்புகளை (Lot: 0235133592, DLC: 3/09/2025) குறிக்கிறது. இந்த தயாரிப்புகளை Intermarché கடைகளில் திருப்பி கொடுத்தால் பணம் திருப்பி வழங்கப்படும்.
சரியாக சமைக்கப்படாத கோழி, சால்மொனெல்லா (les salmonelles), காம்பிலோபாக்டர் (Campylobacter) மற்றும் டிரிசினெல்லா (Trichinella) போன்ற பக்டீரியாக்களை வளர்க்கும் அபாயம் உள்ளது.
இந்த உணவை உட்கொண்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் தொற்று போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே இந்த தயாரிப்புகளை சாப்பிட வேண்டாம் என நுகர்வோருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.