Paristamil Navigation Paristamil advert login

ரோமில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பு நிலையம்..! 45 பேர் படுகாயம்

ரோமில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பு நிலையம்..! 45 பேர் படுகாயம்

5 ஆடி 2025 சனி 07:28 | பார்வைகள் : 1080


இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

அப்போது அந்நிலையத்தில் வாயு கசிவு ஏற்ப்பட்டதால் பயங்கர சத்தத்துடன் எரிபொருள் நிலையம் வெடித்து சிதறியது.

இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்