நீதிபதி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டு!!

5 ஆடி 2025 சனி 22:14 | பார்வைகள் : 705
பரிஸில் உள்ள ஒரு நீதிபதி, தனது முன்னாள் துணைவிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கடந்த வாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை தொடர்புடையவரின் நலத்தை கருத்தில் கொண்டு வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நீதிபதி, "வன்புணர்வு" மற்றும் "8 நாட்கள் உடல் சித்திரவதையால் ஏற்பட்ட குருதிக் காயம் ஆகியவற்றை உள்ளடக்கிய குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த நீதிபதியின் பணிநீக்கம் குறித்த முடிவை எடுக்கும்.
நீதிபதிகள் குற்றவாளிகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவது அபூர்வம் அல்ல; கடந்த மாதம், முன்னாள் ஒரு மாநில அரசு வழக்கறிஞர் குடும்ப வன்முறை வழக்கில் மற்றொரு நகரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.