அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலத்திற்கு தீவைப்பு -உணவுவிடுதிக்குள் ஆர்ப்பாட்டம்

6 ஆடி 2025 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 192
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் வழிபாட்டுதலமொன்றிற்கு கதவிற்கு தீவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களிற்கு சொந்தமான இரண்டு உணவுவிடுதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
கிழக்கு மெல்பேர்னில் உள்ள யூதவழிபாட்டு தலத்தின் வாயில்கதவிற்கு தீவைக்கப்பட்டவேளைஉள்ளே சுமார் 20 பேர் இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அல்பேர்ட் வீதியில் உள்ள யூதவழிபாட்டு தலத்தின் கதவின் மீது எரிபொருளை ஊற்றிய நபர் பின்னர் அதற்கு தீ மூட்டியுள்ளார் என விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை,தீயணைப்பு வீரர்கள் சிறிய தீயை கட்டு;ப்படுத்தினார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இஸ்ரேலிய உணவுவிடுதிக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசம் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை கிறீன்ஸ்பரோ பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் மூன்று வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கார்கள் மீது கட்டிடத்தின் சுவர் மீதும் பெயின்டை வீசினார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.