கூலி திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல்?

6 ஆடி 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 853
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தில் அமீர்கான் நடிக்கும் கதாபாத்திர போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தை ஐமேக்ஸில் கண்டு களியுங்கள் என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது.
அதே சமயம் இந்த படம் திட்டமிட்டபடி ஐமேக்சில் வெளியாகுமா என்கிற புதிய கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதற்கு காரணம் கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' திரைப்படமும் வெளியாகிறது. இந்த படமும் ஐமேக்ஸிலும் வெளியாகிறது. 'வார் 2' தயாரிப்பு நிறுவனம் ஐமேக்சில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தங்களது படம் வெளியாகும் அதே நாளில் வேறு ஒரு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி என்றால் கூலி திரைப்படம் எப்படி ஐமேக்ஸில் வெளியாகும், எந்த அடிப்படையில் கூலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்திய போஸ்டரில் ஐமேக்ஸ் லோகோவுடன் அதை வெளியிட்டார்கள் என்கிற கேள்விகளும் திரையுலக வட்டாரத்தில் எழுந்துள்ளன. அதேசமயம் ஐமேக்ஸ் நிறுவனம் தங்கள் பங்கிற்கு கூலி படத்தின் போஸ்டரை இதுபோல பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இது போன்ற பெரிய படங்களின் விளம்பர போஸ்டர்களில் ஐமேக்ஸில் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள் என குறிப்பிடப்படுவது வழக்கமான ஒன்றுதான்,. அதன்படியே கூலி போஸ்டரில் அந்த வாசகம் இடம் பெற்றுள்ளது என்றும் சொல்கிறார்கள். இனி ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் தான் கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகுமா இல்லையா என்பது தெரிய வரும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1