சென் நதியில் நீச்சல்.. இரண்டாவது நாளே தடைப்பட்டது!!

6 ஆடி 2025 ஞாயிறு 17:57 | பார்வைகள் : 408
நூறு ஆண்டுகளின் பின்னர் சென் நதியில் நீந்த முடியும் என அறிவிக்கப்பட்டு, ஜூலை 5 ஆம் திகதி நேற்று சனிக்கிழமை முதல் நீச்சல் தடாகங்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக மூடப்பட்டது.
பரிசில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக சென் நதியின் நீர் மாசடைந்துள்ளது எனவும், தண்ணீர் பரிசோதனையின் பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படு எனவும் பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
பரிசில் நேற்று சனிக்கிழமை இரவு பல இடங்களில் 10 மி.மீ வரை மழை பதிவானது.
அதை அடுத்து நீரின் தூய்மை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளிவந்ததும் மீண்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.