நோர்து-டேம் : ஏழு மாதங்களில் 6 மில்லியன் பார்வையாளர்கள்!!

7 ஆடி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 417
நோர்து-டேம் தேவாயலம் ஐந்து ஆண்டுகளின் பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் மீள திறக்கப்பட்டிருந்தது. இந்த ஏழு மாதங்களில், இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 35,000 பேர் வருகை தருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தீயில் எரிந்த நோர்து-டேம், அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் திருத்தப்பணி இடம்பெற்றிருந்தது. இந்த திருத்தப்பணிகளை அடுத்து, 2024 டிசம்பர் 7 ஆம் திகதி மீள திறக்கப்பட்டிருந்தது.
ஒருவார சிறப்பு வழிபாடுகளின் பின்னர், டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அன்றில் இருந்து 2025 ஜூன் 30 ஆம் திகதி வரை 6.02 மில்லியன் பேர் தேவாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவு பார்வையாளர்களை கடந்துள்ளது நோர்து-டேம். இவ்வருட இறுதிக்குள் 12 மில்லியன் பார்வையாளர்களை சந்திக்கும் எனவும், அவ்வாறு சந்தித்தால், உலகில் உள்ள அதிக பார்வையாளர்களைச் சந்தித்த ஒரு இடமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.