ரஷ்ய விமானத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

7 ஆடி 2025 திங்கள் 10:01 | பார்வைகள் : 261
உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷ்யா தொடா்ந்துவரும் நிலையில் , ரஷ்ய விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் கிளைடு குண்டுகள், பயிற்சி விமானம் மற்றும் “பிற விமானங்கள்” உள்ள கிடங்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எனினும் இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.