BRICS அமைப்புடன் இணைந்த நாடுகளிற்கு 10 வீத வரி

7 ஆடி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 218
BRICS நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும்.
இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உச்சிமாநாட்டிற்காக பிரிக்ஸ் கூட்டமைப்பு கூடியிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.