காசாவில் குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

7 ஆடி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 115
காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்துவதால் குழந்தைகளிற்கான பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக குழந்தைகள் பல உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவத் பிரிவின் தலைவர் டாக்டர் அஹ்மத் அல்-ஃபர்ரா தனது வார்டில் ஒரு வாரத்திற்குத் தேவையான குழந்தைகளிற்கு அவசியமான பால்மா போன்றவை மட்டுமே மீதமுள்ளதாகக் கூறினார்.
குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்கனவே தீர்ந்துவிட்டதால் ஏனைய குழந்தைகளிற்கான பால்மாலை பங்கிட்டு அவர்களிற்கு வழங்குகின்றோம் என அவர் தெரிவித்தார்.
விஷயங்கள் எவ்வளவு மோசமானவை என்பதை என்னால் விவரிக்கவே முடியவில்லை. தற்போது ஒரு வாரத்திற்கு போதுமான பால்மாக்கள் எங்களிடம் உள்ளன. இதேவேளை மருத்துவமனைக்கு வெளியேயும் பால்தேவைப்படும் கைக்குழந்தைகள் உள்ளனர் இது பேரழிவு என அவர் கார்டியனிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்
பாலஸ்தீனப் பகுதிக்குள் ஒரு சிறியளவு உதவியைத் தவிர மற்ற அனைத்தையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால் காசாவில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் கையிருப்பு குறைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அமெரிக்க-இஸ்ரேலிய ஆதரவு பெற்ற தனியார் நிறுவனமான காசா மனிதாபிமான அறக்கட்டளை ) மூலம் வரும் உணவு உதவியில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அல்-நுசீராத் அகதிகள் முகாமில் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தாயான 27 வயது ஹனா அல்-தவீல் தனக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்று கூறினார். தனது 13 மாத குழந்தைக்கு பால்மாவை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்
என் மகன் பிறந்ததிலிருந்தே பால் கொடுப்பது பிரச்சினையான உள்ளதுஏனெனில் எனது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொதுவான பலவீனம் காரணமாக என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை" என்று அல்-தவீல் கூறினார்
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகஅவளது மகன் வளர்ச்சி குன்றியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் தனது மற்ற குழந்தைகளை விட அவன் மெதுவாக வளர்வதை அவள் கவனித்துள்ளாள். அந்த குழந்தைகள் ஏற்கனவே தனது வயதில் பேசவும் நடக்கவும் தொடங்கிவிட்டனர்.
அவர் தூங்கும்போது என் அருகில் ஒரு சிறிய ரொட்டித் துண்டை வைத்திருக்க முயற்சிக்கிறேன் ஏனென்றால் அவர் அடிக்கடி உணவு கேட்டு எழுந்திருப்பார். என் குழந்தைகளுக்காக நான் சோகத்தையும் பயத்தையும் உணர்கிறேன் அவர்கள் பசி தாகம் மற்றும் நோயால் இறந்துவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன்" என்று அல்-தவீல் .தெரிவித்துள்ளார்
2023 அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 66 பாலஸ்தீன குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காசாவில் பொதுமக்களுக்கு எதிரான போர் ஆயுதமாக இஸ்ரேல் பட்டினியைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது "பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஏற்படுத்தும்" ஒரு தந்திரோபாயம்என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புள்ள இஸ்ரேலிய அதிகாரியான கோகாட் காசா பகுதிக்குள் குழந்தை உணவு பால் பொருட்கள் உட்பட நுழைவதை கட்டுப்படுத்தவில்லை என்று கூறினார். சமீபத்திய வாரங்களில் 1400 டன்களுக்கும் அதிகமான குழந்தை உணவு காசாவிற்கு வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது
காசாவிற்குள் நுழையும் மருத்துவர்கள் தங்கள் தனிப்பட்ட பொருட்களில் குழந்தைகளுக்கான பால்மாவின் தனித்தனி கேன்களை அடைத்து வைக்க முயன்றுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது சமீபத்தில் மருத்துவப் பணிக்காக காசாவிற்குள் நுழைந்த ஒரு அமெரிக்க மருத்துவரின் பொருட்களில் இருந்து 10 பால்மாவின் கேன்களை இஸ்ரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
“இறுதியில் அவர்கள் அனைத்து பால்மாவின் கேன்களையும் பறிமுதல் செய்தனர் இது குறிப்பாக குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான பால்மாவாகும். இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு எதிராக குழந்தை பால்மா என்ன செய்யப் போகிறது?” எனஅறுவை சிகிச்சை நிபுணர் டயானா நஸ்ஸல் கேள்வி எழுப்பியுள்ளார்.
காசாவிற்குள் நுழையும் பல மருத்துவ ஊழியர்கள் மருத்துவப் பொருட்களை விட கலோரி நிறைந்த உணவுகளால் தங்கள் பைகளை நிரப்புகிறார்கள் என்று நசல் மேலும் கூறினார்.
காசாவில் பசி நெருக்கடி மோசமடைந்துள்ளதால் குழந்தை பால் மிகவும் மோசமாகிவிட்டது கிட்டத்தட்ட 500000 மக்கள் பேரழிவு தரும் பசியை எதிர்கொள்கின்றனர் அதே நேரத்தில் மீதமுள்ள மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்து வருகின்றனர்.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர் இதனால் பால் புட்டிக்கான தேவை அதிகரித்துள்ளது. இணையான சந்தையில் தற்போதுள்ள சிறிய அளவிலான பால் புட்டி மிகவும் விலை உயர்ந்ததாக மாறியுள்ளது ஒரு பால் புட்டியின் விலை சுமார் கூ50 - சாதாரண விலையை விட 10 மடங்கு அதிகம்.
என்னால்அவளுக்கு ஒரு மாதம் இயற்கையாகவே தாய்ப்பால் கொடுக்க முடிந்தது ஆனால் உணவு இல்லாததால் என்னால் இனி அதைத் தொடர முடியவில்லை" என்று இடம்பெயர்ந்த 25 வயது மூன்று குழந்தைகளின் தாயான நூர்ஹான் பரகாத் கூறினார். "தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும் - ஆனால் நான் என்ன செய்ய முடியும்?"
ஜூன் மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்காக தினமும் சுமார் 112 குழந்தைகள் காசாவின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகக் கூறினார். மூன்று வயதுக்கு முன் ஊட்டச்சத்து குறைபாடு நிரந்தர வளர்ச்சி பிரச்சினைகளை ஏற்படுத்தும்
இந்த முழு தலைமுறையும் குறிவைக்கப்படுகிறது. அவர்கள் நினைவாற்றல் பிரச்சினைகள் வளர்ச்சி தாமதங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் ... மேலும் பிரச்சனை என்னவென்றால் ஊட்டச்சத்து பின்னர் கிடைத்தாலும் சேதம் நிரந்தரமானது" என்று அல்-ஃபரா கூறினார்.
ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளுக்கு இளம் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் குழந்தைகளின் இறப்பு காசாவின் வரவிருக்கும் பட்டினி நெருக்கடியின் கவலைக்குரிய அறிகுறியாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"குழந்தைகள் இறக்க ஆரம்பிப்பதை காணும்போது எச்சரிக்கையும் பீதியும் தீவிரமடையவேண்டும் அடிப்படையில் பட்டினி நெருக்கடிகளில் முதலில் இறப்பது குழந்தைகள்தான்" என்று சர்வதேச குழுவான ஆவாஸ் மூலம் உதவி வழங்க முயற்சிக்கும் மருத்துவக் குழுவின் உறுப்பினரான டாக்டர் தேர் அகமது கூறினார்.
நன்றி virakesari