Paristamil Navigation Paristamil advert login

தொடரும் அகழ்வு - செம்மணியில் அதிகரிக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை

தொடரும் அகழ்வு - செம்மணியில் அதிகரிக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை

7 ஆடி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 161


யாழ்ப்பாணம்-செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 47 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதைகுழியில் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கைகளின் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாள் அகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதுவரை மொத்தமாக 47 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது டன் 44 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்