Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் எப்போது வெப்பமான கோடை?

மீண்டும் எப்போது வெப்பமான கோடை?

7 ஆடி 2025 திங்கள் 13:15 | பார்வைகள் : 657


ஜூலை மாதம் வெப்ப அலைகளுடன் தொடங்கி, பின்னர் இடியுடன் கூடிய மழைக்குள்ளான பிரான்சில், சூரிய ஒளி மீண்டும் நிலவவிருக்கிறது. கோடை விடுமுறையின் இந்த முதல் வாரம், நாடு முழுவதும் பெரும்பான்மையான பகுதிகளில் வெயிலுடன் அமையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

மழைக்குப் பிறகு வானம் தெளிவடையும். கடந்த வாரம் ஏற்பட்ட வெப்ப அலைக்கு அடுத்ததாக, இடியுடனும் மழையுடனும் கூடிய வானிலை நீடிக்காது. விடுமுறையின் இந்த வாரத்தில், முழு பிரான்சும் சூரிய ஒளியை அனுபவிக்கும்.

முதலில், திங்கள் அன்று நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழைகள் காணப்படும். ஆனால் தென்கிழக்கு பிரதேசம் மற்றும்  Brdeaux -> Cherbourg  வரை உள்ள கடற்கரைப் பகுதிகள் விதிவிலக்காக அமையும்.

காலையில்  Bourges, Chaumont, Aurillac  ஆகிய இடங்களில் வெப்பநிலை 15°C  இருக்கும். பிற்பகலில் நிஸ் பகுதியில் அது 30°C வரை உயரும்.
செவ்வாய்க்கிழமை முதல் முழு பிரான்சிலும் சூரிய ஒளி விரிந்து காணப்படும்.

Vichy பகுதியைச் சுற்றி சற்று மழைகள் தொடரலாம். காலையில் Chaumont, Belfort பகுதிகளில் வெப்பநிலை 14°C வரை குறையும். பிற்பகலில், மொன்பெலியேவில் (Montpellier) 29°C வரை வெப்பநிலை உயரும். பெரும்பாலான இடங்களில் வெயிலாக இருக்கும். Belfort குதியில் மட்டும் சில மழைத் துளிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதன்கிழமை முதல் வார இறுதி வரை நாடு முழுவதும் சூரியன் பிரகாசிக்கும். பருவத்திற்கு ஏற்ற வெப்பநிலை பதிவாகும். தென் பிராந்தியங்களில், வெப்பநிலை 30°C ஐ சற்றே தாண்டும்.

வெள்ளி பிற்பகலில் தென் மேற்கு பகுதியில் சில மேகங்கள் தோன்றலாம். இருப்பினும், அந்த நேரத்திலும் பெரும்பாலான இடங்களில் வானம் தெளிவாகவே இருக்கும்.

வானிலை மையம் திங்கள் நாளுக்காக இரண்டு மாவட்டங்களை வெப்ப அலை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையில் வைத்துள்ளது. மேலும், வலுவான காற்று காரணமாக நான்கு மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்