மாபெரும் துயரத்தின் தண்டனை!

7 ஆடி 2025 திங்கள் 14:15 | பார்வைகள் : 651
மார்செயில் குற்றவியல் நீதிமன்றம் 2025 ஜூலை 7ஆம் திகதியான இன்று சுRUE D'AUBAGNE வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2018 நவம்பர் 5ஆம் தேதி, மார்செய் நகர மையத்தில் உள்ள RUE D'AUBAGNE இல் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். மொத்தம் 16 பேர் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இன்று (ஜூலை 7) நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் நீதிபதி, 1வது மாடியில் இருந்த ஒரு கொமேரியன் குடும்பத்துக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட குடியிருப்பின் உரிமையாளரின் தவறுகளை விளக்கிவிட்டு, எந்தத் திருத்த வேலைகளும் செய்யமல் மிகவும் மோசமான நிலையில் வீட்டைப் பேணிய உரிமையாளரின் பெருந்தவறு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த மூன்று வீடுகளின் உரிமையாளர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரிற்குத் தண்டளை வழங்கப்பட்டது.
Sébastien A. 3 ஆண்டு சிறை தண்டனையை பெற்றார், அதில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் இரண்டு ஆண்டுகள் வீட்டில் இலத்திரனியல் வளையத்துடன் இருக்க வேண்டும் எனவும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Martine A. 3 ஆண்டு சிறை தண்டனை, 20,000 யூரோ அபராதம், 5 ஆண்டுகள் சொத்து வாங்கும் தடை மற்றும் குடியிருப்பை வாடகைக்கு வழங்குவதற்கான தடை ஆகிய தண்டனைகளிற்கு உட்பட்டார்.
Gilbert A 4 ஆண்டு சிறை தண்டனை (2 ஆண்டு சிறை 2 ஆண்டு இலத்திரனியல் வளையத்துடன்), மேலும் 5 ஆண்டு சொத்து வாங்கும் தடை போன்ற தணடனைகளிற்கு உள்ளானார்.
Xavier C, Taher Hedfi தவறுதலான கொலை, மற்றும் Rachid Ramouni இனைப் பாதிப்படையச் செய்த மற்றும் அவரைக் கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டுகளிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை (2 ஆண்டு சிறை, 2 இலத்திரனியல் வளையத்துடன்) மற்றும் 100,000 யூரோ அபராதம் எனத் தண்டனை விதிக்கப்பட்டார்.
மேலும் இதனுடன் கட்டம் இடிந்து விழுவதங்கு நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட பலரிற்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மார்செய் நகராட்சிக்குச் சொந்தமான மார்செய் Habitat நிறுவனம், 63எண் கட்டிடத்திற்கான சொந்தக்காரராக இருந்தாலும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட போதிலும், அவை இடிந்து விழுந்ததற்கான நேரடி காரணமாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்து தள்ளுபடி செய்துள்ளது.
2018 நவம்பர் 5ஆம் தேதி காலை 9 மணியளவில், RUE D'AUBAGNE இன் 63 மற்றும் 65எண் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இவை இடையே இருந்த 67எண் கட்டிடமும் அதன் பின் இடிந்து வீழந்தது.
63 மற்றும் 67 எண்கள் வெறுமையான மற்றும் பாழான கட்டிடங்களாக இருந்தன. 65 எண் கட்டிடம் இணைச் சொத்து ஆகும். இதில் 8 பேர் இங்கு உயிரிழந்தனர், அவர்கள் 1வது, 2வது, 3வது மற்றும் 5வது மாடிகளில் இருந்தனர்.
இடிந்தவுடன் 187 குடும்பங்கள் அருகிலுள்ள 18 கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வழக்கு 6 வாரங்கள் நீடிக்கப்பட்டு, 2024 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது.
இந்த வழக்கை இணைந்து முறையிட்ட 87 பாதிக்கப்பட்டோர், வழக்கின் முடிவை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சோகத்தை மறுபடியும் நிகழ விடாமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றனர்.