Paristamil Navigation Paristamil advert login

மெலோன்சோன் கட்சியின் முட்டாள்தனம் - மக்களிற்குப் பேராபத்து - அரசியல் வட்டாரம்!

மெலோன்சோன் கட்சியின் முட்டாள்தனம் - மக்களிற்குப் பேராபத்து - அரசியல் வட்டாரம்!

7 ஆடி 2025 திங்கள் 15:15 | பார்வைகள் : 432


பிரஞ்சு மக்கள் தங்கள் நகராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், மதில்த் பனோ (Mathilde Panot) LFI (La France Insoumise)  எனப்படும் இடதுசாரி கட்சி பாராறுமன்ற உறுப்பினர்களின் தலைவி, மாநகரக காவல்துறையின் (POLICE MUNICIPALE) ஆயுதங்களை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வாதம் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

«இங்கும் அங்கும் கூடுதலாக ஆயுதம் ஏந்திய மாநகரக் காவல்துறை பண்பாட்டில் நாங்கள் ஒப்பில்லை. அவை உள்ளூர் நிர்வாகங்களுக்கு மிகுந்த செலவுகளை ஏற்படுத்துகின்றன. நெருக்கமாகச் செயல்படும் மாநகர காவல்துறைக்க ஆயுதம் தேவைப்படாது» என்று ஜூலை 6, ஞாயிறன்று தொலைக்காட்சியில் மதில்த் பனோ தெரிவித்தார்.

அதையடுத்து, தங்கள் கட்சி (LFI) ஆட்சி அமைத்தால், ஆயுதமற்ற மாநகரக் காவல்துறையை நேரடியாக தேசிய காவல்துறையுடன் இணைத்துவிடலாம் என்றும் பனோ தெரிவித்தார்:
«ஒரே நாளில் அவர்கள் வேலை இழக்கமாட்டார்கள்» எனவும் கூறினார்.

இக்கூற்றுகள், தொழிலாளர்களிடையே பெரும் கோபத்தை கிளப்பியுள்ளன.

தேசிய மாநகரக் காவல்துறை கூட்டமைப்பின் தலைவர் தெரி கொலோமார் (Thierry Colomar) ஊடகச் சந்திப்பில், «இதைக் கேட்டவுடனே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மதில்த் பனோ எங்கு நிற்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது »

«நாங்கள் ஆயுதத்தை கைவசம் வைத்திருப்பது காப்புறுதி மாதிரியே. நாம் அதை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வராதிருக்க வேண்டுகிறோம். ஆனால் மக்கள் தாக்கப்பட்டால், ஆயுதமில்லாத காவல்துறை எதையும் செய்ய முடியாமல் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றால் பயன் உ, அதன் பயனென்ன? நாங்கள்தான் களமுனைக்குச் செல்லும் முதல் வீரர்கள். பொது வாழ்க்கையின் காவல்துறை. நாங்கள் மக்களை காக்கவும், நம்மையும் காக்கவும் தேவையான ஆயுதங்கள் வேண்டும்» என தெரி கொலோமர் வலியுறுத்தினார்.

மேலும், பனோ, காணொளி கண்காணிப்புக்  காட்சிகள் பயனற்றவை எனக் கூறி, அவற்றையும் அகற்ற வேண்டுமென முட்டாள்தனமாகக் கோரினார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் ஆத்திரம் பெருகியது.

நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன் 'X' கணக்கில்,

«இப்படிப்பட்ட இடதுசாரி ஆட்சி வந்தால், மக்கள் பாதுகாப்பு என்ற உரிமையையே இழக்க நேரிடும். ஆபத்தில் மக்கள் சிக்குவார்கள். இது மக்கள் இல்லாத இடதுசாரி அரசியல்» எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பேரணியான RN தலைவர் ஜோர்தான் பார்தெல்லா, «பழையபடி, இடதுசாரி கட்சி குற்றவாளிகளையும் குழப்பத்தையும் தேர்ந்தெடுக்கிறது. RN மாநகரசபைகளின்  பாதுகாப்பை தங்கள் ஆட்சியின் முதன்மைச் செயலாக செய்யவுள்ளனர்» என்றார்.

இல்-து-பிரோன்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ், «LFI எங்கள் நகரங்களில் பாதுகாப்பற்றதன்மையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மக்கள் இதை நிச்சயமாக மதிப்பீடு செய்வார்கள் இவர்கள் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். நகராட்சி தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு தடையாக நிற்போம்!» என்றார்.

இடதுசாரி தரப்பிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் (PS) தலைவர் ஒலிவியர் போர் (Olivier Faure) «LFI காணொணி கண்காணிப்பையும் மாகரக் காவல்துறையின் ஆயுதத்தையும் அகற்றப் போவதாக அறிவித்தால், நாங்கள் ஆதரிக்க மாட்டோம் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இது எங்கள் கட்சியின் திட்டத்தில் இல்லை» என்றார்

இப்படியான பிரேரணைகளால் இடதுசாரிக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டு LFI தனிமரமாகத் தோற்கப் போகின்றது எனவும் அரசியல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்