இலங்கையில் கைதான பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

7 ஆடி 2025 திங்கள் 16:04 | பார்வைகள் : 171
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளது.
களுபோவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொஹுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.