சேவை ஒன்றை நிறுத்தும் - Orange தொலைத்தொடர்பு நிறுவனம் !!

7 ஆடி 2025 திங்கள் 18:35 | பார்வைகள் : 591
பிரான்சின் சில இடங்களில் மட்டும் சேவையில் இருக்கும் 2G இணைய சேவையை Orange தொலைத்தொடர்பு நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து படிப்படியாக இந்த சேவைகளை நிறுத்தி, வருட இறுதிக்குள் முற்றுமுழுதாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகள் 5G அதிவேக இணையத்துக்கு மாறியுள்ள நிலையில், 2G சேவையினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை கைவிடும் முடிவினை Orange நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு 3G இணைய சேவைகளும் பயன்பாட்டில் இல்லை எனவும், ஆனால் சட்டரீதியாக உடனடியாக அவற்றை நிறுத்த முடியாது என்பதால், வரும் வருடங்களில் அவற்றையும் நிறுத்துவதற்குரிய ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து 2G சேவைகள் புழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 3G சேவைகள் 2028 ஆம் ஆண்டில் இருந்து முற்றாக நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.