ஜேர்மனியில் நாயை லாக்கரில் வைத்து பூட்டிய பெண்

7 ஆவணி 2025 வியாழன் 06:04 | பார்வைகள் : 107
ஜேர்மனியிலுள்ள பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு தன் நாயுடன் சென்றுள்ளார் ஒரு பெண்.
சக சுற்றுலாப்பயணிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதைத் தொடர்ந்து அவர் செய்த செயல் பொலிசாரை வரவழைத்துள்ளது.
திரைப்படங்களில் இடம்பெறக்கூடிய, ஜேர்மனியிலுள்ள பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்ற பெண்ணொருவர், தன்னுடன் தன் நாயையும் அழைத்துச் சென்றதால் சக சுற்றுலாப்பயணிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
நாய் தான் சுற்றுலா செல்வதற்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதிய அந்தப் பெண், அந்த நாயை பொருட்கள் வைக்கும் லாக்கர் ஒன்றில் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுலாவுக்குக் கிளம்பியுள்ளார்.
லாக்கரில் நாய் ஒன்று அடைக்கப்பட்டுள்ளதை அறிந்த பாதுகாவலர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
உடனடியாக நாய் இருக்கும் இடத்துக்கு விரைந்த பொலிசார் லாக்கரிலிருந்த நாயை மீட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஏற்கனவே அதிக வெப்பம் நிலவும் நிலையில், அந்த நாய்க்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். என்றாலும், சரியான நேரத்தில் பொலிசார் அதை மீட்டதால் அந்த நாய் உயிர் தப்பியுள்ளது.
நாயை லாக்கரில் அடைத்த பெண், ஜேர்மன் விலங்குகள் நல சட்டத்தை மீறியுள்ளதாக கருதப்படுவதால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.