எம்பப்பே PSG-க்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றார்!

7 ஆடி 2025 திங்கள் 22:32 | பார்வைகள் : 372
ரியல் மாட்ரிட் (Real Madrid) வீரர் கிலியான் எம்பப்பே (Kylian Mbappé), PSG கழகத்திற்கு எதிராக மனதளவிலான தொந்தரவு மற்றும் ஒப்பந்தம், கையெழுத்து அழுத்த முயற்சி தொடர்பாக மே மாதம் தாக்கல் செய்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
2023 கோடைக்காலத்தில் PSG-வின் “loft” பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டதற்காக இந்த நடவடிக்கையை எம்பப்பே எடுத்திருந்தார். இந்த புகாரை வாபஸ் பெற்றும், PSG மீது தொழிலாளர் நீதிமன்றத்தில் அவரது சம்பள பாக்கிகள் — 55 மில்லியன் யூரோ தொடர்பான வழக்கு தொடர்கிறது.
இந்நிலையில், PSG தலைவர் நாசர் அல்-கலைபி (Nasser al-Khelaïfi) மற்றும் எம்பப்பே இடையிலான உறவுகள் சமீபத்தில் மிருதுவாகி உள்ளன. ஜூலை 9 அன்று, கிளப் உலகக் கோப்பை அரையிறுதியில் எம்பப்பே மற்றும் PSG அணிகள் மோதவுள்ளன.
PSGஇலிருந்து ரியல் மட்ரிட்ற்கு சென்ற 13 மாதங்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு அமைதியான ஒன்றாக இருக்கலாம். PSG-வின் சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்குப் பிறகு, எம்பப்பேவுக்கு நாசர் வாழ்த்துத் தெரிவித்தும் உள்ளார்.