நார்போனில் 1,450 ஹெக்டேரை கருக்கிய தீ! A9 நெடுஞ்சாலை மூடப்பட்டது!

7 ஆடி 2025 திங்கள் 23:16 | பார்வைகள் : 283
நார்போன் (Narbonne- Aude) மாவட்டத்தில், Saint-Julien de Septime குடியிருப்பு பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து 1,450 ஹெக்டேரைக் கடந்துவிட்டதாக நார்போன் மாநகரபிதா பெர்ட்ரான் மல்கியே (Bertrand Malquier) தெரிவித்தார்.
தீ வெகுவேகமாக பரவி கொண்டிருக்கிறது, அதற்கு மிகுந்த காற்று காரணமாக இருப்பதாக Aude மாகாண ஆளுநர் கிறிஸ்தியான் பூஜே கூறினார்.
தீயைத் தடுத்து நிறுத்துவதற்காக A9 நெடுஞ்சாலை நார்போனின் அருகில் இருபுறமும் மூடப்பட்டுள்ளது.
A61 நெடுஞ்சாலை, D6009 மற்றும் D613 ஆகிய மாவட்ட வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
10,000 குடும்பங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. இது 'தீயினால் பலவீனமடைந்த பகுதியில் நாளின் இறுதியில் மின் நுகர்வு அதிகரிப்பால்' ஏற்பட்டுள்ளது.
Roche-Grise, Montplaisir , Réveillon மற்றும் Prat-de-Cest பகுதிகள் வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
600 தீயணைப்புப் படையினர் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 கனடேர் விமானங்கள், 2 உலங்குவானூர்திகள், 2 தாஷ் விமானங்கள், மற்றும் 2 ஏர் டிராக்டர் விமானங்கள் தீயணைப்பில் ஈடுபடுகின்றன.
சில வீடுகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சில இடங்களில் தன்னிச்சையான இடப்பெயர்வுகள் (évacuations spontanées) மேற்கொள்ளப்பட்டுள்ளன.