அமெரிக்காவில் திடீர் வெள்ளம் - 104 பேர் பலி

8 ஆடி 2025 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 199
அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
கெர்கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது,
30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்த 24 - 48 மணி நேரத்திற்குள் இப்பகுதியில் புயல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது