அவுஸ்திரேலியாவின் கொடூர பெண் - நீதிமன்றம் விதித்த தண்டனை

8 ஆடி 2025 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 243
அவுஸ்திரேலியாவில் மூன்று பேரை கொன்ற வழக்கொன்றில் எரின் பெட்டர்சன் என்ற பெண் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், தனது 3 உறவினர்களுக்கு கொடிய விஷம் கொண்ட காளானை உண்பதற்காக கொடுத்துக் கொல்ல முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த குடும்ப விருந்தொன்றின் போது, கொடிய விஷம் கொண்ட காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பெட்டர்சன் பரிமாறினார்.
குறித்த உணவை உட்கொண்ட பெட்டர்சனின் முன்னாள் மாமியார் டொன் மற்றும் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதன்போது, குறித்த விருந்தில் கலந்துகொண்ட உள்ளூர் போதகர் இயன் வில்கின்சன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து, பெட்டர்சன் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்ததுடன் தனக்கு புற்றுநோய் இருப்பதாக பொய்யாகவும் கூறியுள்ளார்.
எனினும், அவரது பொய்யை கண்டறிந்த நீதிமன்றம், அவர் ஒரு கொலைக் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.