Paristamil Navigation Paristamil advert login

முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்

முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்

8 ஆடி 2025 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 153


திண்டிவனம் அருகே ஓமந்துாரில், இன்று (ஜூலை 08) நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ம.க.,வில் தந்தை- மகன் மோதல் முற்றிய நிலையில், இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பா.ம.க.,வில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என, மூன்று அதிகார அமைப்புகள் உள்ளன.

அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்தார். அதில் அன்புமணி, அவரது ஆதரவாளர்களான பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூலை 08) திண்டிவனம் அருகே ஓமந்துாரில், பா.ம.க., செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

* கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு மட்டும் அதிகாரம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது, கட்சிக்கும், நிறுவனருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தீர்மானம்.

* தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்