Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் பிஸ்கட் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

பெண்கள் பிஸ்கட் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8836


பெண்கள் பிஸ்கட் மற்றும் கேக்குகள் சாப்பிட்டா கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஒரு வாரத்தில் மூணு தடவைக்கு மேல பிஸ்கட் மற்றும் கேக் வகைகளை சாப்பிட்டாலே புற்று நோய் வரும் அபாயம் இருப்பதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.

பிரிட்டனில் ஒரு ஆண்டுக்கு சுமார் 6400 பெண்களுக்கு கர்பப்பை புற்று நோய் வர்றதாகவும், அதுல சுமார் ஆயிரம் பெண்கள் மரணமடைவதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறியவே ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள்.

ஆனால் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு தெரியவில்லையாம். பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் தான் புற்று நோய்க்கான ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இன்னும் பல ஆய்வுகள் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆய்வுடன் ஒத்து போச்சுனா புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். ஆகவே பெண்களே, ஆராய்ச்சி முடிவு என்னவேனாலும் இருந்திட்டு போகட்டும். எதுக்கும் பிஸ்கட், கேக்குகள் சாப்பிடுவதை கொஞ்சம் கொறச்சுக்கங்க.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்