நோய்நொடி இல்லாத வாழ்விற்கு உதவும் உடற்பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10048
நன்றாக உடலை வளைத்து நெளித்து செய்யும் உடற்பயிற்சிதான் நம் உடலைக் கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. சரிவிகித உணவு மற்றும் முறையான உடற்பயிற்சிக்கு உடலைப் பழக்கப்படுத்திவிட்டால், மிடுக்கான தோற்றத்தையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும் பெறலாம்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க எல்லோருக்குமே ஆசைதான் என்றாலும், சிலர் மட்டுமே அதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டு இறுதி எல்லைக்கோட்டை வெற்றிகரமாகத் தாண்டுகின்றனர். வீட்டுக்கு அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினராகச் சேர்வதில் ஆரம்பித்து, அதற்கெனப் பிரத்யேக உடை, காலணி என ஒவ்வொன்றையும் ஆசைஆசையாக வாங்குவது எனப் பலருக்கு ஓப்பனிங் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்கும்.
ஆனாலும், மூன்றே மாதங்களில் சிக்ஸ்பேக் எனச் சூளுரைத்து, மூன்று வாரங்களில் சிங்கிள்பேக்குடன் ஒதுங்கிவிடுவார்கள் இவர்கள். பாதியிலேயே இவர்கள் பயிற்சியை நிறுத்திவிடுவதற்கு பணிச்சுமை, நேரமின்மை, எதிர்பார்த்த ரிசல்ட் உடனே கிடைக்காத விரக்தி எனக் காரணங்கள் பலவகை.
உடலுக்கு உறுதியை மட்டும் அல்ல, மனதுக்கும் உற்சாகத்தைப் பாய்ச்சும் உடற்பயிற்சியை ஒருசிலர் மட்டுமே ஆர்வம் குறையாமல் மேற்கொள்கின்றனர். தினமும் 30 உடற்பயிற்சியை மேற்கொண்டால் வாழ்வில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். வீட்டில் இருந்தபடியே சில எளிய பயிற்சிகளை செய்து வந்தாலும் நல்ல பலன்களை பெற முடியும். ஆரோக்கியம் காக்க வேண்டும் எனில், வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி அவசியம்.