சீனாவின் J-35A போர் விமானங்கள் தொடர்பில் பின்வாங்கிய பாகிஸ்தான்

8 ஆடி 2025 செவ்வாய் 15:33 | பார்வைகள் : 218
சீனா - பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பி உறவில் விரிசல் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானும் சீனாவும் பல ஆண்டுகளாக இராணுவ கூட்டணியை பராமரித்து வந்த நிலையில், சமீபத்தில் வந்த தகவல்கள் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.
சீனாவின் 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர்விமானமான J-35A-யை வாங்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “நாங்கள் J-35A போர்விமானங்களை வாங்குவது பற்றிய எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இது அனைத்தும் ஊடகக் கூறுகளே. இது சீனாவின் பாதுகாப்பு விற்பனைக்கு மட்டுமே நல்லது” என கூறியுள்ளார்.
இந்த நிலைமாற்றம் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முநீர் அமெரிக்கா சென்ற பிறகு ஏற்பட்டது.
அங்கு நடந்த உள்நாட்டு மற்றும் இராணுவ தரப்பு பேச்சுவார்த்தைகளால், பாகிஸ்தான் அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க திட்டமிட்டிருக்கலாம்.
டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, பாகிஸ்தானை சீனாவின் இராணுவ பொருட்கள் மீது குறைவான சார்பு வைத்திருக்க அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், பாகிஸ்தான் F-16 விமானங்கள் மற்றும் மேம்பட்ட Air-to-Air ஏவுகணைகள் கோரி அமெரிக்காவிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் கூறியதாவது:
“சீனா-பாகிஸ்தான் உறவுகள் எந்த மூன்றாம் நபருக்கும் எதிராக இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்த regional stability-ஐ பாதுகாக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.