பரிஸ் தெரஸில் கார் மோதியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்!!!

8 ஆடி 2025 செவ்வாய் 15:27 | பார்வைகள் : 470
பரிஸ் 19வது வட்டாரத்தின் பெல்வில் (Belleville) தெருவில் ஜூலை 5ஆம் தேதி, ஒரு இளம் பெண் ஓட்டிய ஹூண்டய் (Hyundai) கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரு உணவகத்தின் முன் அமைந்த கோடைகால தெரஸில் மோதியது.
இந்த விபத்தில் 13 பேர் லேசாக காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவருக்கு எலும்பு முறிவு சந்தேகம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கார் மீது "புதிய டிரைவர்"( A) என்கிற ஸ்டிக்கர் இருந்தது.
விபத்துக்குப் பிறகு பெண் டிரைவர் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக சாட்சிகளை விசாரிப்பதும், காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது அவரது காவல் நீக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.