சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு - 17 பேர் மாயம்

9 ஆடி 2025 புதன் 04:28 | பார்வைகள் : 101
சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளதாக, அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா-நேபாள எல்லைப் பகுதியில், கைரோங் என்ற நகரத்தில் இன்று அதிகாலையில் பெய்த கனமழையை அடுத்து, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில், 17 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தில், சீனாவைச் சேர்ந்த 11 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள், சேற்றில் சிக்கி இருக்கலாம் எனவும், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.