Paristamil Navigation Paristamil advert login

Tour de France : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

 Tour de France : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

8 ஆடி 2025 செவ்வாய் 19:06 | பார்வைகள் : 561


Tour de France  நான்காவது கட்ட போட்டிகள் இடம்பெற்ற Rouen (Seine-Maritime) நகர் அருகே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுததாரி ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

அங்குள்ள  Saint-Hilaire பகுதியில் வைத்து 3.30 மணி அளவில் நபர் ஒருவர் சுடப்பட்டார். குறித்த நபர் காவல்துறை வீரர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதை அடுத்து அவர் காவல்துறையினரால் சுடப்பட்டார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் காவல்துறை வீரரை தாக்கியமைக்குரிய காரணம் குறித்து அறிய முடியவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்