€715,000 மதிப்புள்ள திருடப்பட்ட 11 ஓவியங்கள் மீட்பு: 6 பேர் கைது!

8 ஆடி 2025 செவ்வாய் 22:58 | பார்வைகள் : 387
715,000 யூரோக்கள் மதிப்புள்ள 11 ஓவியங்கள் கடந்த டிசம்பர் 29 அன்று ஒரு வீட்டில் இருந்து திருடப்பட்டன. உரிமையாளர் சந்தேகப்படும் சத்தங்களை கேட்டபோது திருட்டு நடந்தது தெரியவந்தது.
திருடர்கள் கண்காணிப்பு கேமராக்களை மறைத்து வீட்டை விட்டு தப்பியுள்ளார்கள். விசாரணையின் போது, திருடர்களுக்காக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் மேலும் ஒருவர் வீட்டுக்குள் நுழைய உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
ஜூலை 1ஆம் திகதி நடத்தப்பட்ட காவல் துறையினரின் நடவடிக்கையில், 6 பேர் கைது செய்யப்பட்டு, 11 ஓவியங்களும் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, பணக்கணிப்பான் மற்றும் பல முன் கட்டண தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஓவியங்களை கறுப்பு சந்தையில் விற்க திட்டமிட்டிருந்தனர் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.