Paristamil Navigation Paristamil advert login

1,00,000 மின் கணக்கீட்டுப் பெட்டிகளில் மோசடி - அதிரடி நடவடிக்கை!

1,00,000 மின் கணக்கீட்டுப் பெட்டிகளில் மோசடி - அதிரடி நடவடிக்கை!

9 ஆடி 2025 புதன் 05:00 | பார்வைகள் : 518


பிரான்சின் மின் விநியோக வலையமைப்பைப் பராமரிக்கும் நிறுவனமான ENEDIS, லிங்கி (Linky) எனப்படும் மின் கட்டணக் கணக்கீட்டுப் பெட்டிகளின் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, நாடுமுழுவதும் பரந்த ஆய்வுச் செயல்பாட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை 121 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

'கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் 1,00,000-க்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் பெட்டிகள் மோசடியானவை என்பதைக் கண்டறிந்துள்ளோம். இது தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது..' என Enedis-இன் செயல்பாடுகளுக்குத் தலைமை வகிக்கும் Bertrand Boutteau தெரிவித்தள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 250 அதிகாரப்பூர்வ ஆய்வாளர்கள் இருப்பதை,  2026 ஆம் ஆண்டில் 500 ஆக உயர்த்த Enedis  திட்டமிட்டுள்ளது. காரணம், இந்த மோசடிகள் நிறுவனத்துக்கு வருடத்திற்கு நூறுகளுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்துகிறது.

மோசடியாளர்கள், வாடிக்கையாளர்களின் உண்மையான மின் நுகர்வை குறைவாகப் பதிவாகச் செய்யும் வகையில் மின்னோட்டத்தைத் திருப்பும் முறையை பயன்படுத்துகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ஒரு உணவக உரிமையாளர் தினமும் 85 கிலோவாட் மணி மின்சாரத்தை நுகர்வார் ஆனால் 2024 மே மாதத்திலிருந்து அவர் கணக்கில் 25 கிலோவாட் மணி மட்டுமே பதிவாகியுள்ளது.

'ஒவ்வொரு ஆண்டும் மோசடியாகும் மின்சார அளவு, Charente மாகாணத்தின் மொத்த நுகர்வுக்கு நிகரானதாகும்.' என ENEDIS-இன் பேச்சாளர் Laurence Magliano தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் மோசடி வழிமுறைகள்

சமூக ஊடகங்களில் மின் கட்டணத்தைக் குறைக்க போலியான வழிகள் பரவுவதால் இந்த மோசடிகள் பெருகி வருகின்றன. Enedis, இவ்வாறு உள்ளடக்கம் வெளியிடும் தளங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை நீக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

தண்டனை

பாதுகாப்பாக உள்ள 95சதவீத பிரான்ஸ் நிலப்பரப்பில், Linky பெட்டிகள் நேரடியாக Enedis-க்கு தகவல்களை அனுபபுகின்றன, எனவே மோசடிகள் எளிதில் கண்டறியப்படுகின்றன.

மீறல் உறுதிசெய்யப்பட்டால், 75,000 யூரோ அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறைதண்டனை வரையிலான தண்டனை விதிக்கப்படும். தொடர்புடைய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்