எலோன் மஸ்கின் புதிய கட்சி குறித்து ட்ரம்ப் ஆச்சரிய கருத்து...

9 ஆடி 2025 புதன் 11:15 | பார்வைகள் : 237
தொழிலதிபர் எலோன் மஸ்கின் புதிய கட்சி குறித்து டொனால்ட் ட்ரம்ப் ஆச்சரியமான கருத்தை கூறியுள்ளார்.
சமீபத்தில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.
அமெரிக்க கட்சி என்ற பெயரில் அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஸ்கின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) "அபத்தமானது" என்று சாடினார்.
மேலும், 'கடந்த ஐந்து வாரங்களாக எலோன் மஸ்க் முற்றிலும் தண்டவாளத்தில் இருந்து விலகி செல்வதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் கோபத்தை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்தின. இந்த நிலையில் ட்ரம்பின் பேச்சில் ஆச்சரிப்படுத்தும் வகையிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் தற்போது "குடியரசுக் கட்சியினரைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், மூன்றாவது கட்சிகள் எப்போதும் எனக்கு நல்லது. அது எங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.