இலங்கையில் டேட்டிங் செயலி மூலம் ஆணை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது

9 ஆடி 2025 புதன் 12:15 | பார்வைகள் : 667
ஓரினபால் சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, கொள்ளையடித்த ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை கடற்கரையில் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி 9,000 ரூபாய் பணம், மடிக்கணினி மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பாணந்துறை, பெல்லன்வில, ஹிரான, மொரோந்துடுவ மற்றும் வாலனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரை, சந்தேக நபர்கள் டேட்டிங் செயலி மூலம் தொடர்புக்கொண்டு பின்னர் பாணந்துறை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அவரது ஆடைகளை கலைத்து வீடியோவாக பதிவு செய்து, பின்னர் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2