தனுஷ் விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?

9 ஆடி 2025 புதன் 12:23 | பார்வைகள் : 184
தனுஷை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் அந்த வீடியோ காட்சியை நீக்காவிட்டால் தனக்கு 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் டென்ஷன் ஆன நயன்தாரா, தனுஷை சரமாரியாக சாடி அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.
இப்படி காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுடன் மல்லுக்கட்டிய தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால் அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் வட சென்னை யூனிவர்ஸை சிம்பு - தனுஷை வைத்து உருவாக்கத் தொடங்கிவிட்டார் வெற்றி.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படக்குழுவுக்கு தனுஷ் செய்துள்ள உதவி பற்றிய தகவலும் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி தனுஷ் படத்திற்காக ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டதாம். அந்த செட்டில் தனுஷ் பட ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, விஜய்யின் ஜன நாயகன் படக்குழு, தங்கள் படத்தின் பாடல் காட்சியை படமாக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். இதை அறிந்த தனுஷ், உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படி சிம்பு, விஜய் படங்களுக்கு இலவசமாக வாரி வழங்கிய தனுஷ், நயன்தாராவிடம் மட்டும் ஏன் பணம் கேட்டார். அவர்மீது அம்புட்டு கோபமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.