மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன்

9 ஆடி 2025 புதன் 13:50 | பார்வைகள் : 160
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக நடிக்க விக்ரமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜமவுலி. ஆனால் அவர் அப்பா வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதை அடுத்து தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது மகேஷ் பாபுவுக்கு 49 வயதாகிறது. மாதவனுக்கு 55 வயதாகிறது.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடைபெற உள்ளது. அப்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ராவுடன் மாதவன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.