Paristamil Navigation Paristamil advert login

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக மௌனம் கலைத்த கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக மௌனம் கலைத்த கோலி

9 ஆடி 2025 புதன் 15:23 | பார்வைகள் : 220


டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற காரணம் குறித்து கோலி பேசியுள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பே, அணித்தலைவராக இருந்த ரோஹித் ஷர்மாவும் ஓய்வு அறிவித்திருந்தால், கோலியின் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஆனால், கோலி தனது ஓய்வு முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், தனது ஓய்வுக்கான காரணம் குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் YouWeCan அறக்கட்டளையின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது.

இதில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, கிறிஸ் கெயில், ரவி சாஸ்திரி, விராட் கோலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விராட் கோலியை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர், மைதானத்தில் உங்களை அனைவரும் மிஸ் செய்கிறோம். ஓய்வுக்கான காரணத்தை எப்போது கூறுவீர்கள் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, "நான் 2 நாட்களுக்கு முன்புதான் என் தாடிக்கு சாயம் பூசினேன். ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு சாயம் பூச வேண்டி இருந்தால், ஓய்வு பெரும் நேரம் வந்துவிட்டது என்பது தெரியும்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய கோலி, ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங் உள்ளிட்டோருடனான கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்தார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்