அமெரிக்க விமான நிலையங்களில் காலணி சோதனை நிறுத்தம்!

9 ஆடி 2025 புதன் 16:04 | பார்வைகள் : 187
அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகள் இனி காலணிகளை அகற்றி சோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் (Kristi Noem) அறிவித்துள்ளார்.
வொஷிங்டனின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஊடகவியலாரை சந்தித்த போது போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (TSA) இந்த புதிய மாற்றத்தை அவர் அறிவித்துள்ளார்.
அதேவெளை அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டிலிருந்து சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (08) முதல் அந்தக் கொள்கையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2001ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் (Richard Reid) என்பவர் தனது காலணிகளில் வெடிபொருளை மறைத்து வைத்திருந்தார். அவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகள் காலணிகளை அகற்ற வேண்டியிருந்ததாக குறிப்பிட்ட அவர், இந்த விதிமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.