Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா...?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா...?

9 ஆடி 2025 புதன் 16:33 | பார்வைகள் : 693


நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்கள் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக். காதல் திருணம் செய்த அவர்கள், அடிக்கடி ரொமான்ஸ் போட்டோ போட்டு மற்ற ஜோடிகளை வெறுப்பேற்றும் அவர்கள் பிரிந்துவிட்டார்களா?

உண்மையில் என்ன நடக்கிறது என்று அவர்கள் தரப்பில் விசாரித்தால், ''இதை யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார்கள். அப்போது அவர்களின் மகன் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சாமி கும்பிட்ட வீடியோ அவ்வளவு வைரல் ஆனது. அப்படிப்பட்ட பாசக்கார தம்பதிகள் பிரிவார்களா?

இப்போது தான் இயக்கும் எல்ஐகே படத்தில் விக்னேஷ் சிவனும், தான் நடிக்கும் படங்களில் நயன்தாராவும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் புயல் வீசவில்லை. அவர்கள் இடையே மனப்பிரச்னையும் இல்லை. பணப்பிரச்னையும் இல்லை. அப்படி இருக்க சிலர் வேண்டுமென்ற கிளப்பிவிட்டு குளிர் காய்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், ஒரு இன்ஸ்டா பதிவு, ''குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும், உங்கள் கணவர் செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல, என்னை விட்டுவிடுங்கள். நான் ஏராளமான பிரச்னைகளை உங்களால் அனுபவித்துவிட்டேன்' என்று நயன்தாரா பதிவிட்டு, அதை உடனே நீக்கிவிட்டார் என்று கூறப்பட்டது. அதை வைத்து இப்படிப்பட்ட வதந்தி கிளம்பியது. உண்மையில் அந்த பதிவை நயன்தாரா பதிவிடவில்லை. போலியாக அப்படி ஒரு பதிவை சிலர் பரப்பினர்.

இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் நேற்று இரவு கூட நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் அலுவலகத்தில் ஒன்றாக இருந்தார்கள். சின்ன பார்ட்டி கூட நடந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாக வீட்டுக்கு கிளம்பினார்கள். விரைவில் இந்த செய்திக்கு அவர்களே தங்கள் ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்' '' என்கிறார்கள்.

2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இருவரும் இணைந்த ‛நானும் ரவுடிதான்' படம், 2015ம் ஆண்டு வெளியானது. அதிலிருந்து இவர்கள் காதலித்தார்கள். தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறார்கள்.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்