ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்த பிள்ளையான்!

9 ஆடி 2025 புதன் 17:00 | பார்வைகள் : 785
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார்.
சிறையில் அவர் இருக்கும்போதே இதனை அறிந்து வைத்திருந்தார் என்பதற்கான தகவல்களும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“யோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சிவனேசதுறை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற வேளை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தார்.
அந்நேரம் பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தெரியும் என்பதற்கான தகவல்கள் தற்போது வௌியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வேளையில், அதில் சதித்திட்டம் ஒன்று உள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்க, தற்போது நீண்ட விசாரணை ஒன்று நடைபெற்று வருகின்றது.
அதனால் குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்” என்றார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2