காட்டுத்தீ! - 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

10 ஆடி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 711
காட்டுத்தீ பரவல் காரணமாக இன்று ஜூலை 10, வியாழக்கிழமை நாட்டின் 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bouches-du-Rhône, Vaucluse , Gard, Hérault, Aude, Pyrénées-Orientales, Charente-Maritime, Charente, Deux-Sèvres மற்றும் Vendée ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19 ஆம் திகதி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக காடுகள் உலர் தன்மையை அடைந்ததாகவும், அதன்காரணமாக காட்டுத்தீ மிகவும் மூர்க்கமாக எரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை வரையான நிலவரப்படி 800 ஹெக்டேயர்கள் காடு எரிந்துள்ளன. 24 மணிநேரங்களுக்கு மேலாக 1,000 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி வருகின்றனர்.